Skip to content

அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாளையொட்டி… 630 மாணவ-மாணவிகளுக்கு தபால்துறை வைப்பு கணக்கு

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி துவக்கப்பள்ளி பயிலும் 630 மாணவ மற்றும் மாணவியர்கள் மேலும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 840 மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் இன்பன்ட் ஜீசஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் 1115 மாணவ மாணவியர்களுக்கும் ஆஷா தீபம் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் பயிலும் 40 மாணவிகளுக்கும் தபால் துறையில் தொடர் வைப்பு கணக்கில் சேர்வதற்கான கணக்கை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார் நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், எடமலைப்பட்டி புதூர் கவுன்சிலர் முத்து செல்வம் ,
கவுன்சிலர் ராமதாஸ் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!