கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைத்ததால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் , பஸ்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சாலை சீரமைக்கப்பட்டவுடன் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் வனத்துறை என தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை சாலக்குடி சாலையில் ஆனைக்காயம் அருகில் ஒரு வளைவில் மழையின் காரணமாக விரிசல் விழுந்து பாலம் சேதம் அடைந்தது. இதனால் வால்பாறையில் இருந்து சோலையார் அணை வழியாக சாலக்குடி செல்ல வேன் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு கேரளா வனத்துறையினர் அனுமதி இல்லை எனவும் இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது . வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு வழியாக சாலக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் வாளைச்சால் வனத்துறை சோதனை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்

