Skip to content

விஏஓவின் கணவர் தற்கொலை-லோடு ஆட்டோ திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Authour

இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்கள் திருட்டு

திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் வயது 30
இவரும் இவரது நண்பர் சையது இப்ராஹிம் இருவரும் கண்டோன்மெண்ட் வார்னஸ் ரோடு காவிரி நகரில் உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் காண்ட்ராக்ட் எடுத்தனர் பின்னர் அந்த கட்டிடத்தை இடித்த போது கிடைத்த காப்பர் வயர் மற்றும் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை சையது இப்ராஹிம் அன்புள்ள ஒரு அறையில் வைத்திருந்தார் அப்போது மர்ம நபர் ஒருவர் அதனை திருடி சென்று விட்டார் இது தொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் வடகிழக்கு எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சேர்ந்த சிவா 19 என்பவரை கைது செய்தனர்

சாலையோரம் நிறுத்தப்பட்ட லோடு
ஆட்டோவை திருடிய வாலிபர்

ஸ்ரீரங்கம், காந்தாயா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 62 இவர் லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார் வழக்கம் போல் அங்குள்ள சாரி தெருவில் ஜானகிராமன் என்பவரது வீட்டின் முன்பு லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார் பின்னர் மறுநாள் சென்று பார்த்தபோது வாகனத்தை காணவில்லை மரபு நகர் திருடி சென்று விட்டார். இது பற்றி பழனிச்சாமி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோவை திருடி சென்ற தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு
பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்கிற சிலம்பரசன் 32 என்பவரை கைது செய்தனர்.

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர், பகுதியை சேர்ந்தவர் சிவகுருநாதன் இவரது மகன் வெங்கடேசன் ( 25) இவர் எலக்ட்ரிஷன் இந்நிலையில் நேற்று பஞ்சபூர். ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மின்சாரம் தாக்கி வெங்கடேசன் மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்களை வெங்கடேசன் இறந்து விட்டதாக கூறினார் இந்த சம்பவங்களுக்கு எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெண் விஏஓவின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி மேல தெருவை சேர்ந்தவர் தியாகு (35)இவரது மனைவி
மாயுமுன் பிவி ( 34) இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தியாகு மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதையடுத்து கடந்த சில மாத காலமாக அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று வலி தாங்க முடியாமல் விரக்தி அடைந்த தியாகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய தியாகு உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகன மோதி ஒருவர் சாவு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இரவலூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஹானஸ்ட் டேனியல் (54 )இவர் திருச்சி புத்தூர் நான்கு ரோடு மதுபான கடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதமாக ஹானஸ்ட் டேனியல் மீது மோதியது.இந்த விபத்தில் காயம் அடைந்த ஹானஸ்ட் டேனியல் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹானஸ்ட்
டேனியல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!