வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணத்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டு கடற்கரையைவிட்டு டிட்வா புயல் விலகி சென்றது. கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக் கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது 30 முதல் 70 கிலோ மீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும். வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது. டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றிவிட்டது. இன்று மாலை புயலின் சுழற்சியால் மீண்டும் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

