ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டம் ரத்தன்புரா பகுதியில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர். மனோகர்பூர்-டசா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது முன்னே சென்ற மற்றொரு வாகனத்தை கார் முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது சாலையில் எதிரே வந்த லாரி மீது கார் மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

