Skip to content

மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

  • by Authour

சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் முகாம்கள் அமைத்தும், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers-BLOs) வீடு வீடாக சென்றும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை (Enumeration Forms) வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பிற மாநிலத்தவருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தரக்கூடாது என வலியுறுத்தி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!