Skip to content

வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

திருச்சி பாலக்கரை காஜா பேட்டை ரயில்வே காலனி பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (30). இவர் விளக்குமாறு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் வியாபாரியை ஹக்கீமை தகாத வார்த்தைகளால் திட்டி ,அடித்து பீர் பாட்டிலால் குத்தியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ஹக்கீம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் எஸ்ஐ குமார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வீடு கட்டும் பொருள்கள், கார் திருட்டு-3 வாலிபர்கள் கைது

திருச்சி சண்முகா நகர் 5 -வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன். (71 ). இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பொருட்களை போட்டு வைத்திருந்தார். அதில் உள்ள பொருட்களை சிலர் திருடி விட்டனர். இதுகுறித்து வேல்முருகன் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பொருட்களை திருடியதாக காளிமுத்து, ஹரி விஸ்வா, முகமது ரஷீத் ஆகிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் திருச்சி உறையூர் பாண்டமங்கலம் ராஜலட்சுமி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது காரை திருடிவிட்டதாக சரவணக்குமார் என்பவரது மனைவி அருணா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து கார் திருடியவர்களை தேடி வருகின்றனர்.

பஸ் மோதி முதியவர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி பெருவெள்ளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (54). இவர் திருச்சி கே.கே.நகரில் இருந்து மன்னார் புரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் .அப்போது சர்வீஸ் ரோடு சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மகன் திருக்குமரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நீதிமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன் தலைமை தாங்கினார். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சி. முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் வடிவேல்சாமி , பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், இணைச்செயலாளர் விக்னேஷ், பொருளாளர் சதீஷ்குமார், நகர வழக்கறிஞர் சங்க பொருளாளர் சுதர்சன், முன்னாள் துணைத் தலைவர் மதியழகன், முன்னாள் செயலாளர் சுகுமார், மூத்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார், பிரபு, பொருளாளர் கிஷோர் குமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர்கள் சரவணன், ஏ. ராஜேந்திரன் ,
பெரியசாமி, ஜெகதீசன் சந்திரசேகரன், சிற்றரசு, கண்ணன், ஐ.செல்வராஜ், சுகன்யா, வனஜா, கவுசல்யா, வழக்கறிஞர் நியூமேன், ஆர்.ஏ.அஸ்வின் ராஜா, கரண்ராஜ், தீபன், கோபி ,மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!