புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்தரும் பழம்பதிநாதர் எனும் விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தில் உலக நலன் வேண்டியும், ஒவ்வொருவர் குடும்பமும் உயர்வு பெற வேண்டியும் கூட்டுப் வழிபாடு திருவிளக்கு பூஜை திருவருள் கருணையால் சிறப்பாக நடைபெற்றது, முத்துக்குடா ,புதூர் தீர்த்தாண்டம் ,மீமிசல்,தீயத்தூர் சுற்று வட்டார 600க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டனர்.

