கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்பிரமணியா ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரேன் உதவியுடன் பணிகள் நடந்தது கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கிரேன் வாகனம் சாய்ந்து ரயில் தண்டவாளத்தில் குறுக்கே விழுந்தது. இதனால் அங்கு சென்ற மின்வயர்கள் அறுந்து விழுந்தன.
அதிர்ஷ்டவசமாக அந்தப்பகுதியில் யாரும் இல்லாததாலும், ரெயில் எதுவும் வராததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் விழுந்த கிரேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் சுப்பிரமணியா ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

