பொங்கல் விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் நடனம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது முன்னதாக அலுவலர்கள் செய்த கலர் பொடி கோலங்களுக்கு மதிப்பெண் அளித்தார். பின்னர் கயிறு இழுக்கும் போட்டியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினார் இந்த போட்டியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் அலுவலர்கள் கயிறு இழுத்து முதலாவதாக

வெற்றி பெற்றனர் பின்னர் பெண் அலுவலர்கள் கயிறு இழுத்து அடுத்ததாக வெற்றி பெற்றார்கள்
இதனை அடுத்து அங்கு உறியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மாவட்ட ஆட்சியர் சரியாக

பானையில் குச்சியை கொண்டு அடித்து அசத்தினார்.
பின்னர் மாவட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இசைக்கு ஏற்ப நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

