திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செல்வ நகர் பகுதியில் கஞ்சா விற்ற துவாக்குடி பகுதியைச் சேர்ந்த இளவரசன் (20) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல், அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கணேஷ்குமார் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

