Skip to content

தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக

திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்த்தியுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பரப்புரையில் கீழ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள். தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும் மேலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள் கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைமை கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரையை வெற்றியடையச் செய்ய மண்டலப் பொறுப்பாளர்கள், மா.செக்கள் ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளை செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை மேற்கொள்ளும் நட்சத்திரப் பரப்புரையாளர்களின் பட்டியல் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!