தங்கம் விலை இந்த ஆண்டு பாதிக்குள் ரூ. 2 லட்சத்தை தாண்ட வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விலையானது தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. உலக சந்தையில் ஏற்படக்கூடிய பொருளாதார மாற்றங்கள், பண வீக்கம், டாலர் மதிப்பு சரிவு, உலக நாடுகளிடையேயான மோதல்கள் போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுவந்த நிலையில் ஆண்டு இறுதியில் ரூ. 1 லட்சத்தை தாண்டியது. விலையேற்றம் இந்த ஆண்டும் தொடரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை தினமும் காலை, மாலை என இரண்டு முறை அதிகரித்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் மத்திய பட்ஜெட் மற்றும் உலக நாடுகளிடையேயான தங்க முதலீடு குறைவு போன்ற காரணங்களால் இந்த மாதம் தொடங்கியதிலிருந்து ஏற்ற இறக்கம் கண்டுவருகிறது.
.இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-உம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து விற்பனையாகிறது
ஒரு கிராம் : ரூ.14,230
ஒரு சவரன் : ரூ. 1,13,840க்கு விற்பனை

