Skip to content

கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்தது.

ஹல்டி மற்றும் சங்கீத் விழாக்கள் உட்பட, திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் புகைப்படங்களை இருவரும் ஏற்கனவே பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பல அறிக்கைகளின்படி, இந்த ஜோடி இரண்டு பாரம்பரிய முறையில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. ஒன்று விஜய் தேவரகொண்டாவின் குடும்ப பாரம்பரிய தெலுங்கு திருமணமாகவும், மற்றொன்று ராஷ்மிகா மந்தனாவின் குடும்பத்தின் கூர்க் (கொடவா) முறையில் திருமணம் நடக்க உள்ளது.

திருமணம் உறுதியானதும் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக தொடங்கின. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் ஐடிசி மாளிகையில்தான் அவர்களது திருமணம் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.

இத்திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் என மணமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ மூன்றாவது நபர்கள் மூலம் லீக்காகிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அந்த ரூலை தங்களது திருமணத்தில் போட்டிருந்தார்கள்.

கடந்த 24ஆம் தேதி ஹல்தி மற்றும் மெஹந்தி கொண்டாட்டமும், நேற்று சங்கீத் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குடும்பத்தினர் உற்சாகத்தோடு இருந்தார்கள். இந்நிலையில் இன்று ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தின்போது இரண்டு பேரின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு அவர்களை ஆசீர்வதித்தார்கள். மேலும் இருவரின் ரசிகர்களும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்துவருகிறார்கள்

திருமணம் முடிந்திருக்கும் சூழலில் இன்று மாலை நான்கு மணிக்கு கொடவா மரபுகள்படி மீண்டும் திருமண நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. தொடர்ந்து மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடக்கிறது. அதில் இந்திய திரைத்துறையிலிருந்து எக்கச்சக்க பேர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

error: Content is protected !!