முன்னாள் தமிழக முதல்வர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜரின் பிறந்த நாள் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில் காமராஜரின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் வட்டாரத் தலைவர் தெற்கு சேதுராமன், நகரத் தலைவர் தனபால், நிர்வாகிகள் பாண்டியன், சேதுராமன், வர்த்தக அணி நிர்வாகி சரவணன், மகளிர் அணி நிர்வாகி சுகன்யா உட்பட பங்கேற்றனர்.
