Skip to content
Home » மாடல் சிற்பங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்….. படங்கள்…

மாடல் சிற்பங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்….. படங்கள்…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று (30.12.2022) பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு,  உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி,   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  பி.கீதா ஜீவன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்

த. வேலு. துணை மேயர்  மு. மகேஷ் குமார், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர்  ஏ.எஸ். குமரி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர்  சிற்றரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  ஷம்பு கல்லோலிகர்,  சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர்   ச. வளர்மதி, இ.ஆ.ப., 181 மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர்  ஷரின் பாஸ்கோ, மணற் சிற்பி கஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!