கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம். இந்த பண்டிகை தற்போது தமிழகத்திலும் பரவலாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது. மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். ஒரு குழந்தை
Video Player
00:00
00:00
மகாபலி சக்கரவத்தி வேடமிட்டு விழாவில் பங்கேற்றது. மாணவிகளின் கயிறு இழுத்தல் போட்டி, நடனங்கள் என நிகழ்ச்சிகள் களைகட்டின. விழாவில் கல்லூரி டிரஸ்டி கமலா சவுந்தரபாண்டியன், முதல்வர் கிருஷ்ணவேணி மற்றும் பேராசிரியைகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.