Skip to content

இறந்த பெண்ணின் உடலை வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்…

பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்  குடும்ப பிரச்சினை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு  கொண்டார். உயிருக்கு போராடிய பிரியாவை அவரது உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில்  சிகிச்சை பலனளிக்காமல் பிரியா நேற்று உயிரிழந்தார்.  பிரியா திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இருந்ததால் கோட்டாட்சியரின் விசாரணை நடைபெற்ற பிறகு தான் உடற்குறை ஆய்வு முடித்து உடலை ஒப்படைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  பிரியாவின் இறப்பு குறித்து அரியலூர் கோட்டாட்சியரிடம் ப்ரியாவின் உறவினர்கள் மனு அளித்தனர். அரியலூர் கோட்டாட்சியர் விடுமுறையில் உள்ளதால் பொறுப்பு கோட்டாட்சியர் இன்று மதியம் 4.30 மணியளவில் சென்று விசாரணை செய்தார்.

மாலை நேரம் ஆகிவிட்டதால் உடற்கூறு ஆய்வு இன்று நடத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்து பிரியாவின் உடலை ஒப்படைக்க கோரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு முன்னால் அமர்ந்து சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.  இரண்டு நாட்கள் ஆன நிலையில் பிரியவின் உடலை உடனே பரிசோதனை செய்துதர வேண்டும் என்று சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து அரியலூர் காவல் துறையினர் பிரியாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடற்கூறு ஆய்வு நடத்த  நடவடிக்கை எடுப்பதாக கூறி சாலைமறியலை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!