Skip to content

திடீரென தீப்பற்றி எரிந்த கார்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டி மேம்பாலம் அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் பழுது காரணமாக சாலையோரத்தில் அதன் ஓட்டுனர் நிறுத்தி விட்டு காரில் கீழே இறங்கிச் சென்று பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் ரசாயன நுரையை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!