சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்துள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடிக்கச் சென்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை வழக்கில் கணேஷை கைது செய்ய முயன்ற போது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதால் தற்காப்புக்காக என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூ.25 லட்சம் பணமும் 15 பவுன் நகையும் கொள்ளையடித்த வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது இந்த என்கவுன்ட்டர் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

