கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார்.
இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர் நீண்ட நேரமாக வராததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காணாமல் போன நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் செந்தில்குமாரை சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.