நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான லியோ திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா படத்தில் நடித்திருப்பதால் கற்பழிப்பு காட்சி இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவரை கண்ணிலேயே காட்டவில்லை என்று கூறி இருந்தார். இந்த கருத்து திரைப்படத்துறையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது
படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா ஆகியோர் மன்சூர் அலிகானை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் , நடிகர் மன்சூர் அலிகானுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் சொன்ன கருத்துக்கு திரிஷா எனக்கு நன்றி சொல்ல வேண்டும் . அவரைப்பற்றி நான் தப்பாக சொல்லவில்லை. என்னை அவமானப்படுத்தியதற்காக நான் தான் திரிஷா மீது வழக்கு தொடர வேண்டும். நடிகர் சங்கம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் இமாலய பிழையை செய்து விட்டது. என் மீதான கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும்.
என்னை பதில் சொல்ல விடுங்க. நீங்க 450 பேர் நின்று கேள்வி கேட்கிறீங்க. நான் சொல்றதை கேளுங்க. இப்படித்தான் தம்பி உதயநிதி சனாதனம் பற்றி பேசினதற்கு எல்லோரும் கருத்து சொன்னாங்க. நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். இதுவரை காங்கிரசை தாக்கி பேசிய நீங்க இப்போது ஏன் காங்கிரசை ஆதரிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு , நியூ பிளட்(புது ரத்தம்) வரணும். ராகுல், பிரியங்கா ஆகியோர் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.