நடிகை ராஷ்மிகா தமிழ்படமான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இது தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.ராஷ்மிகா தனது இரண்டாவது இந்தித் திரைப்படமான மிஷன் மஜ்னு திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தத் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது ராஷ்மிகா அடுத்ததாக இந்தி மொழித் திரைப்படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு நாயகியாக நடித்தார் .புஷ்பா 2 திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தார் இந்நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பரபரப்பு பேட்டி பின் வருமாறு: நான் மிகவும் எமோஷனலான ஒரு பெண். ஆனால், நான் பணியாற்றும் துறையை வைத்து, அதை நான் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி நான் செய்தால், ‘ராஷ்மிகா கேமரா முன்னால் இருப்பதற்காகவே இப்படி செய்கிறார்’ என்று சொல்கின்றனர். எனக்கு எதிராக ட்ரோல் செய்வதற்கு அதிக பணம் கொடுக்கப்படுகிறது. திரையுலகில் என்னை வளர விடாமல் தடுக்கின்றனர்.
இது எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. என்மீது அன்பு செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள், அதுவே எனக்கு போதும். நான் எப்போதுமே மிகவும் உண்மையானவளாக இருப்பேன். ஆனால், எல்லா நேரத்திலும் அதையே என்னால் வெளிப்படுத்த முடியாது. காரணம், இங்கு நான் அதிக அன்பு செலுத்தினால், போலியாக இருப்பது போல் பலர் நினைக்கின்றனர்.