யுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம் செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில் அவர் நீடிப்பார். 1985ம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றினார். இவர் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர். கான்பூர் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் பொறியியல் படித்தவர். பின்னர் மினசோட்டா பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கேயே டாக்டா் பட்டமும் பெற்றார்.
கேரள மாநில அரசின் பணியில் இருந்தபோது பாலக்காடு கலெக்டர் உள்பட பல பொறுப்புகளை வகித்தவர். பின்னர் அவர் மத்திய அரசின் பணிக்கு சென்றார்.