முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைசுற்றல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் ஆஞ்சியோ பரிசோதனை செய்தனர். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் கூறினார். முதல்வர் நலமுடன் இருப்பதாகவும், அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்றும் துரைமுருகன் கூறினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது
- by Authour
