Skip to content

அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அரசு தலைமைக்கொறடாவும், அரியலூர் அதிமுக மாவட்ட  செயலாளருமான தாமரை. ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்பு, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இளவழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராசு, நகரச் செயலாளர் செந்தில்
உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!