கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரம் . பொள்ளாச்சி-ஜூலை- 16 தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரபலமான கோவிலாகும் தமிழ்நாடு அரசு அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோவில் இந்த கோவிலுக்கு தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா பிற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனையை தரிசிக்க வருகை புரிந்து வருகின்றனர் குழந்தை பாக்கியம் செய்வினை கோளாறு பக்தர்கள் வேண்டுதல்கள் வேண்டி வழிபாடு செய்து வருகின்றனர் அமாவாசை
பௌர்ணமி தினங்களில் மாசாணி அம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அறநிலைத்துறை சார்பில் பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் டென்ட் அமைக்கப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகள் தனி இருசக்கர வாகனம் உள்ளது ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் Angry அதிகமாக உள்ளதால் இரண்டு லட்ச பக்தர்கள் வரக்கூடும் எனவும் கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் ஆனைமலை காவல் நிலைய போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என செயல் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.