சட்டமன்றம், பாராளுமன்றம்.. இன்று துவக்கம்.. .

37
Spread the love

சட்டமன்றம்…. விதிகளின்படி, கூட்டம் முடிந்து ஆறு மாதம் நிறைவடைவதற்குள், அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, இன்று முதல், மூன்று நாட்களுக்கு சட்டசபை கூட்டத்தை நடத்த, சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம் முடிவு செய்தது.

கொரோனா காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில், கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, அரங்கின் மூன்றாவது தளத்தில், உரிய இடைவெளிவிட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பங்கேற்க உள்ள, முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், அலுவலகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் என, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பாராளுமன்றம்…கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச்சில் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு பின், மழைக்கால கூட்டத் தொடருக்காக பார்லிமென்ட், ஜூலையில் கூட்டப்பட்டிருக்க வேண்டும். கொரோனா பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால், தொடர் துவங்குவது தாமதமானது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார நடைமுறைகளுடன், கூட்டத் தொடர் இன்று துவங்கி, அடுத்த மாதம் 1ம் தேதி வரை, வார விடுமுறை இன்றி, 18 நாட்களுக்கு நடக்கவுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாட்டுடன் குறைந்த அளவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நடக்கும் கேள்வி நேரமும் இந்த கூட்டத் தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில், தொடர் துவங்குவதற்கு முதல் நாள், சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் சார்பில், அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடப்பது வழக்கம். இதில், பார்லி.,யில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், தற்போது அனைத்துக் கட்சி கூட்டமும், ரத்து செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY