Skip to content

பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கலாம் என்ற தகவலுக்கு… மறுப்பு..

  • by Authour

பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ புதிய தலைவராக இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் சச்சின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.

இந்​நிலை​யில் 52 வயதான சச்​சின் டெண்​டுல்​கரை நிர்​வகிக்​கும் அவருடைய எஸ்​ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் தலை​வர் பதவிக்கு சச்​சின் டெண்​டுல்​கரின் பெயர் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​களும், வதந்​தி​களும் பரவி வரு​வ​தாக எங்​கள் கவனத்​துக்கு வந்​துள்​ளது. அத்​தகைய முன்​னேற்​றம் எது​வும் ஏற்​பட​வில்லை என்​பதை நாங்​கள் திட்​ட​வட்​ட​மாகக் கூற விரும்​பு​கிறோம். ஆதா​ரமற்ற ஊகங்​களுக்கு நம்​பகத்​தன்மை அளிப்​ப​தை தவிர்க்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட அனை​வரை​யும் கேட்​டுக்​கொள்​கிறோம்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

error: Content is protected !!