கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை, பழைய வால்பாறை, பாரலை லோயர் பாரலை,ஐயர்பாடி, போன்ற எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. வால்பாறை அருகே உள்ள லோயர் பாரளை தொழில் சாலைக்குள் பெரிய கரடி ஒன்று நுழைந்தது அப்பொழுது தொழிலாளர்களை தாக்க முயன்ற நிலையில் தொழிலாளர்கள் கையில் வைத்திருந்த மழை குடையால் விரட்டினர் கரடி தேயிலை தோட்டத்திற்கு ஓடியது.
அதை நேரத்தில் ஐயற்பாடி எஸ்டேட்டில் டேனியல் என்பவருடைய வீட்டின் முன் அறையில் கரடி ஒன்று படுத்து ஓய்வெடுத்தது வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்ட நிலையில் சிசிடிவி யை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் கரடியை பார்த்து அதிர்ந்து அச்சத்தில் இருந்தனர் பின்பு ஜன்னல் கதவுகளை தட்டி சத்தம் எழுப்பிய நிலையில் கரடி அங்கிருந்து ஓடியது இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.