தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போதும் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கபப்பட்டன. எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை. குஷ்பு என முக்கிய நிர்வாகிகள் களம் கண்டபோதும் காந்தி (நாகர்கோவில்). நயினார் நாகேந்திரன் (நெல்லை). வானதி சீனிவாசன் (கோவை தெற்கு). சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகிய 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த முறை 53 தொகுதிகளை கேட்டுப்பெற பாஜக முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்த சட்டசபை தொகுதிகளை கணக்கில் கொண்டு இந்த 50 தொகுதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வரும் 15-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வர உள்ள நிலையில், அவர் மூலம் அதிமுக தலைமையிடம் இந்த பட்டியலை வழங்கவும் தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. பாஜக பட்டியலிட்டுள்ள 53 தொகுதிகளில் சென்னையில் மட்டும் 8 இடங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக பட்டியலிட்ட தொகுதிகள் விவரம் வருமாறு:-
சோளிங்கர், எழும்பூர், துறைமுகம். ஆயிரம் விளக்கு. கொளத்தூர், மயிலாப்பூர், தியாகராயநகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், பவானி, சங்கராபுரம், குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளித்தலை. ஓசூர், தளி, மதுரை தெற்கு, ராசிபுரம், குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, பெரம்பலூர், கிணத்துக்கடவு. தொண்டாமுத்தூர், வால்பாறை, பரமக்குடி, தென்காசி, போடி, ஒட்டப்பிடாரம். ஸ்ரீரங்கம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம். நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர். அருப்புக்கோட்டை.
மேலும், 17 தொகுதிகளை அதிமுகவிடம் பெற்று, தங்கள் வழியாக கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு பிரித்துகொடுத்து தேர்தலை சந்திக்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பாஜகவின் இந்த தேர்தல் கணக்கை பார்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

