பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையில் நேற்று இரவு குண்டு வெடித்தது. சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் தற்போது தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் தெரிக் – இ – தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் கைபர்-பக்துவா மாகாணம் பன்னு நகரில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி அங்குள்ள அதிகாரிகளை பிணைகைதிகளாக பிடித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்கு செல்ல அனுமதித்தால் மட்டுமே பிணைக்கைதிகளை விடுவிப்போம் என்று பயங்கரவாதிகள் கெடு விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.