Skip to content
Home » ஊடுருவல் எதிரொலி.. பிஎஸ்எப் டிஜிபி உள்பட 2 அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

ஊடுருவல் எதிரொலி.. பிஎஸ்எப் டிஜிபி உள்பட 2 அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

ராணுவத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் பாதுகாப்பு படையாக இயங்கி வருவது எல்லைப்பாதுகாப்பு படை என அழைக்கப்படும் பிஎஸ்எப். மேற்கில் பாகிஸ்தான், கிழக்கில் வங்கதேசத்துடனான எல்லை பகுதிகளில், பி.எஸ்.எப்., வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும், அவர்களின் ஊடுருவலை தடுப்பதிலும் இவர்களது பங்கு மிக முக்கியமானது.  இந்நிலையில், பி.எஸ்.எப்., இயக்குனர் ஜெனரல் நிதின் அகர்வால் மற்றும் சிறப்பு இயக்குனர் ஜெனரல் (மேற்கு) ஒய்.பி.குரானியா இருவரையும் பிஎஸ்எப் பணியில் இருந்து விடுவித்து சம்மந்தப்பட்ட மாநிலங்களின் பணிகளுக்கு செல்லுமாறு  அமைச்சரவை நியமனக் குழு உத்தரவிட்டுள்ளது. 1989 கேரள கேடரைச் சேர்ந்த நிதின் அகர்வால், பி.எஸ்.எப்., இயக்குனர் ஜெனரலாக 2023 ஜூனில் நியமிக்கப்பட்டார். இதே போல், 1990 ஒடிசா கேடரைச் சேர்ந்த சிறப்பு இயக்குனர் ஜெனரல் (மேற்கு) ஒய்.பி.குரானியாவும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும், மாநில அரசு பணிகளுக்கு உடனடியாக அனுப்பப்படுவதாக, அமைச்சரவை நியமனக் குழு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக சர்வதேச எல்லையில் இருந்து பயங்கரவாதிகள்

ஊடுருவல் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் இருவரது செயல்பாடுகளால் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருவரும் செயல்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இருவரையும் பிஎஸ்எப் பணியில் இருந்து விடுவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!