Skip to content

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

கர்நாடகாவில் மைசூருவில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ் ஒன்றில் சபரிமலைக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள், அதே பஸ்சில் கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது காசர்கோடு அருகே சிட்டாரிக்கல் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

விபத்தில் பஸ்சில் இருந்து 45 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!