Skip to content

வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வேன் டிரைவருக்கு கத்தி குத்து… 7 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி புத்தூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சீனிவாச பாபு (30). லோடு வேன் டிரைவர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சீனிவாசா பாபு நேற்று புத்தூர் மந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இவரை தாக்கி, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த சீனிவாச பாபு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து உறையூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கருணா, விக்கி, கார்த்திக், விஜயன், ஹரி, சிவனேசன், மகாமுனி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

திருச்சி கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் கவுதம் பாபு நேற்று தன் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது ரெயில்வே ஜங்ஷன் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது உடனடியாக இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசாருக்கு தெரிவித்தார் போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் இறந்த நபர் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெவ்வேறு சம்பவங்களில்..  2 பேர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி காந்தி மார்க்கெட் இ பி சாலையை சேர்ந்தவர் பேச்சியப்பன் (வயது40). இவர் குடிப்பழத்துக்கு அடிமையானவர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார் இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 5ந் தேதி உயிரிழந்தார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று திருச்சி நடு குஜிலிதெருவை சேர்ந்தவர் பிரபு ( 41) நேற்று தன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென மயங்கி சரிந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் பிரபு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு

கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி பிலோமினாள் (வயது61) இவர்கள் கடந்த மாதம் 28ந் தேதி வேலை காரணமாக திருச்சி வந்தனர். இருவரும் இரு சக்கர வாகனத்தில் கருமண்டபம் சிங்கராய நகர் அருகே சென்றனர். அப்போது ஆரோக்கியம் இருசக்கர வாகன கட்டுப்பட்டை இழந்தார், இரு சக்கர வாகனம் கீழே சரிந்தது. இதில் பிலோமினாள் தலையில் காயம் அடைந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் . உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிலோமினாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று திடீரென தலையில் அடைந்த காயம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு பிலோமினாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்ற பெண் கைது

திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை கோரையாறு அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதில் அங்கு கஞ்சா விற்றது
திருச்சி காந்திநகர் புங்கனூரை சேர்ந்த கங்காதேவி (வயது 55) என்பது தெரிய வந்தது. இதைபடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 45 ஆயிரத்து 500 மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

போதை மாத்திரை விற்ற 7 வாலிபர்கள் கைது.

திருச்சி சிந்தாமணி பகுதி வெனிஸ் தெரு அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து போலீசார சோதனை நடத்தினர் அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர் இதில் அவர்கள் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நசுருதீன் (வயது26) ,அஜய் (வயது26), முகமது அப்துல்லா (வயது 28, )திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது27) சர்க்கார் பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்கி (வயது20, திருச்சி கீழ ஆண்டாள் வீதியைச் சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் (வயது19) நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அங்கு போதை மாத்திரை விற்றதும் தெரிந்தது.
இதையடுத்து அந்த 7 வாலிபர்களையும போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 290 போதை மாத்திரைகள் மற்றும் 10 மருத்துவ ஊசிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!