Skip to content

ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயரச் சம்பவம் -தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது ரோந்து பணிகள் இருந்த காவலர்கள் இரண்டு பேர் விசாரணைக்கு வருகை.

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர்.

110 நபர்கள் காயமுற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக சிபிஐ அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகர துணை கண்காணிப்பாளர், நகர காவல் ஆய்வாளர் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தமிழக வெற்றிக்கழக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு சம்பவம் நடைபெற்ற அன்று ரோந்து பணியில் இருந்த இரண்டு காவலர்கள் தற்போது சிபிஐ அலுவலகத்திற்கு வழக்கு விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

இவர்கள் தவுட்டுப்பாளையம் முதல் 6 ரோடு வரை தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன பாதுகாப்பு பணிகள் இருந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கு விசாரணைக்காக காவலர் சில கோப்புகளுடன் ஆஜராகி உள்ளார்.

error: Content is protected !!