சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் விநாயகர் மற்றும் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள கோயிலில் உள்ள உண்டியலை உடைப்பதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த நசரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் சம்பவ இடத்திற்கு சென்று உண்டியலை உடைத்த நபர்களை பொதுமக்களுடன் சேர்ந்து மடக்கி பிடித்தனர் இதையடுத்து நான்கு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது பிடிபட்ட நபர்கள் கோயம்பேட்டை சேர்ந்த சஞ்சய் (19), அர்ஜூன் (21), சூர்யா(20), பிரகாஷ்(20), என்பதும் இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது இவர்களிடம் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்த போது கடைகளை உடைப்பது, பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசுவது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்ததும் சென்னை பகுதியில் உள்ள கோவில்களில் உண்டியலை உடைத்தால் உடனடியாக சிக்கிக் கொள்வோம் என்பதற்காக ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ள பகுதிகளுக்கு சென்று கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது இவர்கள் மீது அம்பத்தூர், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளை உடைத்து திருடிய சம்பவத்தில் போலீசார் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..
- by Authour
