சென்னை, கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் ஒருவர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனை அடுத்து அந்த மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர் பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நவநீதன்(19)வீர சஞ்சய்(20) சரவணகுமார்(18) என தெரியவந்தது இதனையடுத்து அவர்கள் மூவரையும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் ..
சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…
- by Authour
