கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 172 மாணவிகளுக்கும் 8 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பவனார் தலைமையில் நடைபெற்றது
இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் சார் ஆட்சியர் ராமகிருஷ்ணன்சாமி , நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்டோர்

கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம் பி
ஈஸ்வரசாமி நடந்து முடிந்த பீகார் தேர்தலில் தில்லு முல்லு காரணமாக ஒன்றிய அரசு ஆட்சியைப் பிடித்துள்ளதாகவும் தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் திமுக ஏழாவது முறையாக ஆட்சிபொறுப்பேற்கும் என்றும் இரண்டாவது முறையாக மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்பது உறுதி என்றார்.

