திருச்சி தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் தி.மு.கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வருகிற 2 – ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற இருக்கும் சமத்துவ நடை பயணத்தை துவக்கி வைக்க வருகைதர இருக்கிறார். அவருக்கு மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளித்து அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பிப்பது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்ததின் படி புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல்,முகவரி மாற்றம் ஆகிய வற்றிக்கு சிறப்பு முகாம் தேர்தல் ஆணையத்தால் 27.12.2025, 28.12.2025 மற்றும் 3.01.2026, 4.01.2026 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது. இதில் கழகத்தின் நிர்வாகிகள்
நிர்வாகிகள் கலந்து கொண்டு இப்பணிகளை சிறப்பாக செய்வது என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்,
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், அவைத் தலைவர் அம்பிகாபதி, பொருளாளர் துரைராஜ்,மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ் காஜாமலை விஜய், கமால் முஸ்தபா, இளங்கோ,நாகராஜன், ராம்குமார்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வர்த்தக அணிஅமைப்பாளர் சிங்காரம்,முன்னாள் மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தொழிலதிபர் ஜான்சன் குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி, கண்ணன் துர்கா தேவி, மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், தனசேகர், மார்சிங் பேட்டை செல்வராஜ், பி.ஆர்.பி. பாலசுப்பிரமணியன், மூவேந்திரன், கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ், ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி,இன்ஜினியர் நித்தியானந்தம்,பந்தல் ராமு,பிராட்டியூர் மணிவேல், அரவானூர் தர்மராஜன்,ரஜினி கிங், சர்ச்சில், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

