விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வின்பாஸ்ட் ஆலைக்குச் சென்றார். அங்கு பேட்டரி காரில் ஆலையை சுற்றிப்பார்த்தார். பின்னர் முதன் முதலில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு தயாரான காரில் கையெழுத்து போட்டார். அங்கு நடைபெறும் விழாவில் ஆலையை திறந்து வைத்து, கார் விற்பனை தளத்தையும் திறந்து வைத்தார். பின்னர் தொழிலாளர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். அதைத்தொடா்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இது வராலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி. வின்பாஸ்ட் நிறுவன உயர் அதிகாரிகளை நான் மனதார வரவேற்கிறேன். தெற்காசியவில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் ஒன்றான வின்பாஸ்ட் அடிக்கல் நாட்டி 17 மாதங்களில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்து இருக்கிறார்கள். இ வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனம் வின்பாஸ்ட் . அவர்கள் தமிழ்நாட்டின் மேல் வைத்த நம்பிக்கைக்க நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு 40 சதவீத பங்கு வகிக்கிறது. வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு தான். சென்னை தான் இந்தியாவின் டெட்ராய்ட். இதனால் இந்தியா, வியாட்நாம் இடையே நல்ல வர்த்தக உறவு ஏற்படும். இந்த நாள் தென் மாவட்டங்களின் பொன்நாள்.
90 சதவீத பணியாளர்கள் தூத்துக்குடி மற்
றும் பக்கத்து மாவட்டத்தைசேர்ந்தவர்கள் தான் இங்கு பணியில் சேர இருக்கிறார்கள். சென்னை, பெங்களூர் , ஓசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி உருவெடுத்துள்ளது. இந்தியாவின் 2வது முழு மின்வாகன உற்பத்தி ஆலை இது தான். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் இங்கு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இன்னும் பல பாரம்பரிய கார் உற்பத்தி நிறுவனங்களும், மின் வாகனம் தயாரிப்பில் ஈடுபட உள்ளது.
வளர்ந்து வரும் வாகன தொழில் கூடமாக தூத்துக்குடி உருவெடுத்துள்ளது. டிஆர்பி ராஜாவின் உழைப்புக்கு இந்த வின்பாஸ்ட் ஆலையே சாட்சி.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி, தலைமை செயலாளர் முருகானந்தம், , அதிகாரிகள் பங்கேற்றனர்.