தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு ஜமால் முகமது கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அந்த விழாவில் முதல்வருக்கு கல்லூரி சார்பில் தகைசால் திராவிட நாயகர் என்ற விருதினை வழங்குகிறார்கள்.
விழாமுடிந்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு 9, 10ம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 10ம் தேதி மதியம் திருச்சி வந்து சென்னை செல்கிறார்.
மீண்டும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அன்று இரவு திருவெண்காடு வந்து தங்குகிறார். 16ம் தேதி மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் கருணாநிதி சிலை, புதிய பஸ் நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.