தமிழகத்தில், கோவை மூன்றாவது பெரிய நகரம் ஆகும். மேலும் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளி உற்பத்தியின் தலை நகரம் என்று அழைக்கப்படுகிறது. கோவை, மாநகர் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான ஜவுளிக் கடைகள் உள்ளன.
இந்நிலையில் ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிரே ராமராஜ் என்பவர் சொந்தமாக மாவீ டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக் கடை நடத்தி வருகிறார். அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ரெடிமேட் துணிகள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில்
4.8.2025 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு துணி வாங்குவதற்கு ஒரு வாலிபருடன் வந்த பெண் ஒருவர் உள்ளே நுழைந்ததும் அங்கு பணி புரியும் கடை ஊழியர் அவரது மொபைலை மேஜையில் வைத்து விட்டு, துணிகளை எடுக்க உள்ளே சென்று விட்டார்.
இந்நிலையில் துணியை வாங்குவதற்கு உள்ளே வந்த அந்தப் பெண் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அதை யாரும் கவனிக்காத போது மேஜையில் இருந்த செல்போனை எடுத்து தனது கோர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். பின்னர் அவருக்கு வேண்டிய துணிகளை வாங்கிக் கொண்டு அங்கு இருந்து கிளம்பிச் சென்று விட்டார். இதனை அடுத்து கடை ஊழியர் அவர் செல்போனை தேடி உள்ளார். ஆனால் அவர் வைத்த இடத்தில் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து சக ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.
அப்பொழுது அந்த வாலிபருடன் வந்த பெண் தனது பாக்கெட்டில் செல்போனை எடுத்து போட்டுக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துணி வாங்க, துணிக் கடைக்கு வந்த பெண் ஒருவர் அந்தக் கடை ஊழியரின் செல்போனை திருடி சென்ற அந்த காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.