Skip to content

மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு இரங்கல்- கோவையில் நிவேதித் ஆல்வா

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு இரங்கல் –காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா பேட்டி…

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், விமான விபத்தில் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கும், மகாராஷ்டிரா மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் இண்டியா கூட்டணி வலுவாகவும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாக கூறினார். மக்கள் நலன் சார்ந்த அரசியலே இண்டியா கூட்டணியின் அடிப்படை நோக்கம் என்றும், வருங்கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது என்றும், கட்சி முடிவுகளே அதிகாரப்பூர்வமானவை என்றும் விளக்கினார். தனிப்பட்ட கருத்துகள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக கருதப்பட முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!