Skip to content
Home » காங்., வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் மகேஷ் பிரசாரம்….

காங்., வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் மகேஷ் பிரசாரம்….

  • by Senthil

கரூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிவேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுபாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட  வேலுச்சாமிபுரம், புலியூர் மேற்கு கேவிபி நகர்காமராஜபுரம் உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் சின்ன ஆண்டன் கோவில் பகுதியில் ஜோதி மணியை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொது மக்களிடம் கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இதில் கூட்டணி கட்சியான திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக வேட்பாளர் ஜோதி மணிக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில்: இது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல இந்த நாட்டை காக்க கூடிய தேர்தலும் இதனை போராக ஒவ்வொருவரும் கருத வேண்டும்,

குறிப்பாக நம்முடைய உழைப்பின் மூலமாக தரக்கூடிய ஒரு ரூபாய் வரி பணம் வழங்குகின்றோம் என்று சொன்னால் ஒன்றிய அரசு நமக்கு திருப்பி கொடுக்கக்கூடிய பணம் என்பது 26 பைசாக்கள் கொடுக்கின்றனர்.

ஆனால் நம்மிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தை எல்லாம் மற்ற மாநிலத்தில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலத்திற்கு எல்லாம் நம்மிடமிருந்து வாங்கி மூன்று ரூபாயாக திருப்பி தருகின்றனர்.

நமக்கு ஒருவருடத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு மட்டும் ஏறத்தாழ 20000 கோடி இழப்பீடு வருகிறது. இதனை பெற முடியாத காரணம் பாஜக தமிழகத்தை எவ்வாறு வஞ்சிக்கிறது என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை நான் சொல்லி இருக்கின்றேன்.

10 ஆண்டுகளில் பாஜக நாம் தமிழகத்திற்கு என்ன கொண்டு வந்தார்கள் என்பதே நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நம் இந்திய கூட்டணி வெற்றி பெற்று

வந்தவுடன் பெட்ரோல் விலை டீசல் விலை 75, 65 ஆக நாம் தருவோம் எனவும், சிலிண்டர் விலையை 500 ரூபாய்க்கு வழங்குவோம், மோடி என்ன சொல்கிறார் என்றால் மகளிர் தினத்தை ஒட்டி  சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர் வருடம் தான் மகளிர் தினம் வருகிறது அதற்கு குறைக்கவில்லை தேர்தல் வருவதால் குறைத்து உள்ளனர் எனவும், தேர்தல் வந்தால் மகளிர் தினத்தை மட்டும் அல்ல அந்த ஆள் கிழவிகள் தினத்தை கூட  கொண்டாடுவார் எனவும், கிழவிகளுக்கு வெத்தலை பாக்கு இலவசமாக தருவதாகக்கூட சொல்லுவார்கள்.

முத்துவேல் ஸ்டாலின் கருணாநிதி உடைய மண் இது இங்கு உங்களுடைய இந்த ஒரு பித்தலாட்டமும் செல்லுபடி ஆகாது உங்களுக்கான பாடத்தை புகட்டக்கூடிய நாளாக ஏப்ரல் 19 அன்று ஜோதிமணி அவர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!