தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக்கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது புயல் 30 முதல் 70 கிலோமீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கு- தெற்கிழக்கில் டிட்வா புயல் உள்ளது. வேதாரண்யத்டுக்கு கிழக்கு- வடகிழக்கு திசையில் 100 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் முதுவாக நகர்கிறது.

