தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியின் முக்கிய அம்சம் பட்டாசு வெடிப்பது தான். அப்படி பட்டாசுகள் வெடிக்கப்பட்டபோது ஆங்காங்கே தீ விபத்துக்கள் ஏற்பட்டன. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரே நாளில் 364 அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு விபத்து, தீ விபத்து ஏற்பட்டமொத்தம் 254 இடங்களில் இருந்து அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் 102 பட்டாசு விபத்துகள், 9 தீ விபத்துகள் தொடர்பானஅழைப்புகள் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் சிக்கி 47 பேர் உள் நோயாளிகளாகவும், 622 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
