Skip to content

டோனி பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கிரிக்கெட் வீரர் டோனி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்  வீட்டில் நண்பர்களுடன் கேக் வெட்டி  பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.  அவருக்கு  ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது  எக்ஸ் தளத்தில் வாழ்த்து  ெதரிவித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது.  என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

error: Content is protected !!