Skip to content

ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்
கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்தியய அரசு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல் ஏ,திருச்சி மாநகர திமுக செயலாளர் மேயர் அன்பழகன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகி தேவராஜ் மற்றும்
திமுகவின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் ,தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ். டி.பி.ஐ. அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழர் தேசம் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி ,ஆதி தமிழர் கட்சி, ஆம் ஆத்மி உட்பட தோழமைக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள்,மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-
வெற்றி கூட்டணியை வழிநடத்தும் முதலமைச்சர்
கடந்த நான்கு, ஐந்து தேர்தல்களாக திமுக தலைமையில் உருவான கூட்டணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரின் மனமும் புண்படாத வகையில், அனைவரையும் அரவணைத்து இந்த வெற்றிகரமான கூட்டணியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார்.
கேஸ் விலை உயர்வு போன்ற விவகாரங்களில் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார,
நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, எந்த அதிகார வரம்பில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. ஒன்றிய அரசு செய்ய வேண்டியதை, முதல்வர் உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.
தேர்தல் நேரம் என்பதால் நம்மை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர் பேசி வருகிறார்

பாஜகவை தடுப்பதே இலக்கு
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான தேர்தல்,
தமிழ்நாட்டில் பாஜகவை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது என்பதில் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இது தமிழ்நாடு-டெல்லிக்குமான தேர்தல் என்பதை முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இடையில் சிலர் புதிதாகக் கட்சி ஆரம்பித்துச் சில விஷயங்களைக் கூறினாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
வரவிருக்கும் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தைப் புறக்கணிக்கும மத்தியய அரசு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய அரசின் குளறுபடிகளால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டினை உடனடியாக நீக்கக் கோரியும், தமிழகத்திற்கு போதிய திட்டங்களை வழங்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணி அளவில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழகங்களில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!