விமர்சனத்தை ரசித்தாரா ஸ்டாலின்.. விலகும் திருமாவளவன்?

486
Spread the love

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக மற்றும் திமுக சார்பில் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 16ம் தேதி முடிவடைவதால் யார் யாருக்கு எந்ததெந்த இடங்கள் ? என்பது  குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூ கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகள் பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடைந்து இன்று பல மாவட்டங்களில் சீட்டு யார் யாருக்கு என்கிற லிஸ்ட் வெளியாகி விட்டது. விசியின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என கேட்டதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஜெ. அன்பழகன் நமது ஓட்டுக்களை வாங்கிக் கொண்டு ஆளுங்கட்சியினருடன் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்பவர்களை கூட்டணியில் இருந்து கழட்டி விட வேண்டும் என திருமாவளவனை மறைமுகமாக தாக்கி பேசினார். இதன் எதிரொலியாகவே உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் பெரும்பாலான இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளவில்லை என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் சில இடங்களில் பேச்சுவார்த்தையில் விசிகவினர் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த விஷயத்தில் ஜெ. அன்பழகன் பேச்சை ஸ்டாலின் கண்டிக்காதது திருமாவளவனுக்கு வருத்தம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

LEAVE A REPLY